(FASTNEWS | COLOMBO) – மஸ்கெலியா நகருக்கு நீரை வழங்கும் நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள 100 கிலோகிராம் எடை கொண்ட குளோரின் சிலிண்டரில், இன்று (18) காலை ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, மூவர் பாதிக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மஸ்கெலியா கிளையிலுள்ள குளோரின் சிலிண்டரிலேயே, இவ்வாறு வாயு கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு, மஸ்கெலியா பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.