கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – கண்டி பிரதான வீதி கேகாலை கரண்டுபன  பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், வேன் ஒன்றும் மற்றும் கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.