(FASTNEWS | COLOMBO)- ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் கபில அமரகோன் இன்று(20) காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளாரென பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலையானது தேறிவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.