(FASTNEWS | COLOMBO)- எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது படுதோல்வி அடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இம்முறை உலகக் கிண்ண தோல்விக்கு பின்னர் அடுத்த உலகக் கிண்ணத்தினை வெற்றி கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று வரையப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியிருந்தார்.
96களில் கிரிக்கெட் இருந்த நிலைக்கு செல்வதாயின் இன்னும் 7-8 வருடங்களுக்கு திட்டம் தீட்டப்பட வேண்டும். கடந்த அரசின் காலத்தில் அணியில் சங்கா, மஹேல, டில்ஷான் ஆகிய வீரர்கள் இருந்ததாகவும் அவை ஆட்சியாளர்களது பிழை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.