ஷஹிட் அப்ரிடியினை பின்தள்ளி முன்னிலைக்கு வர மலிங்கவுக்கு வாய்ப்பு..

(FASTNEWS | COLOMBO)- இருபதுக்கு – 20 போட்டிகளில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய சாதனையினை தட்டிச் செல்ல இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மேலதிகமாக இன்னும் 03 விக்கெட்கள் தேவைப்படுகிறது.

மேலும் இருபதுக்கு – 20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்கு மலிங்கவுக்கு இன்னும் 04 விக்கெட்கள் தேவைப்படுகின்றது.

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷஹிட் அப்ரிடி 98 விக்கெட்களுடன் முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய விபரம்;

98 – Afridi
96 – Malinga
88 – Shakib
85 – Gul
85 – Ajmal
75 – RashidK
69 – Nabi
67 – Southee
66 – AjanthaM
66 – NKulasekara