(FASTNEWS | COLOMBO) – தான் இருபதுக்கு -20 கிரிக்கெட் மைதானத்தில் முகங்கொடுத்த மிகவும் கடினமான பந்து வீச்சாளர் தான் லசித் மாலிங்க என முன்னாள் இந்திய அணியின் தலைவர் ராகுல் டிராவிட் 2019 இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் (ஐபிஎல்) தொடர்பில் அந்நாட்டு ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
“உலக இருபதுக்கு -20 போட்டிகளில், நான் முகங்கொடுத்த மிகவும் கடினமான பந்துவீச்சாளர் தான் லசித் மாலிங்க என்பதனை தெரியப்படுத்த வேண்டும்..”
“..விசேடமாக இருபதுக்கு – 20 போட்டிகளில் யோகர் பந்துவீச்சில் அவரை மிஞ்ச யாரும் இல்லை. அதனால் தான் நான் நினைக்கிறேன் அவரே எனது கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் சவாலான பந்துவீச்சாளர் என.. அவ்வாறே ஜாஸ்திம் பும்ரா தற்போது சிறந்த வீரராக தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளார். எனினும் எனக்கு பும்ராவின் பந்து வீச்சுக்களுக்கு முகங்கொடுக்கும் வாய்ப்பு இல்லை. எவ்வாறாயினும் லசித் மாலிங்கவின் அவதாரமாக பும்ராவை நான் கருதுகிறேன்..” என தெரிவித்துள்ளார்.