நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர் திருமணம்…

(FASTGOSSIP|COLOMBO) நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது, உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருக்கு கடந்த வியாழன் அன்று திருமணம் நடந்துள்ளது.

கடந்த 15-ம் திகதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவசல்களில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த பள்ளிவாசலுக்கு அருகில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றனர்.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியே அழைத்து வந்தத்துடன், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினர்.

நியூசிலாந்து தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக தப்பிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர் மெஹதி ஹசன். இவர் தன் காதலி ரபேயா அக்தர் ப்ரீத்தியை பங்களாதேஷ் உள்ள குல்னா பகுதியில் கடந்த வியாழன் அன்று திருமணம் செய்து கொண்டார்.

இதேபோல் கிரிக்கெட் வீரர் முஸ்தபீர் ரஹ்மானும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

Image result for Bangladesh cricket team mehidy hasan wedding

Mehidy Hasan Miraz and Rabeya Akhter Priti