ஷானுக ரத்வத்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் மீளவும் விசாரணைக்கு..

(FASTNEWS | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்தவின் மகனான ஷானுக ரத்வத்த உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் மே மாதம் 25ம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்று(25) கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுச் சொத்துக்களை மோசடி செய்தல் தொடர்புடைய சட்டத்துக்கு எதிராக, அரசாங்க நிதி 4.2 பில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் மீதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.