(FASTNEWS | COLOMBO) – கடுவலை பாலத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடுவலை – பியகம வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி நாளை(26) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 05 மணி வரை குறித்த வீதி மூடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் இன்று(25) அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
