பிரெக்ஸிட் விவகாரம் – மெதுவாக வாகனங்களை இயக்கி சாரதிகள் நூதன போராட்டம்…

(FASTNEWS|COLOMBO) பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட குறைவான வேகத்தில் வாகனங்களை மெதுவாக இயக்கி சாரதிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கார் மற்றும் லாரி டிரைவர்களில் ஒருபிரிவினர் ‘GO SLOW’ என்ற நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதன் மூலம் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

வாகனங்களை மெதுவாக இயக்கும் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.