மியன்மாரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) மியன்மாரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 48 பேர் படுகாயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது.

வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு வந்தனர். அவர்கள் வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கிடங்குக்குள் இருந்த அனைவரும் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 16 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.