வெயில் காலத்தில் பலாப்பழ ஸ்மூர்த்தி…

வெயில் காலத்தில் பலாப்பழ ஸ்மூர்த்தி…

(FASTNEWS|COLOMBO) வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பலாப்பழம் – 10
தேங்காய்ப் பால் – 1 கப்
பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) – 1 ஸ்பூன்
தேன் – சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)

செய்முறை :
மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.
இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

சூப்பரான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி.