(FASTNEWS | COLOMBO) – இந்தியன் கிரிக்கெட் வாரியத்தின் கட்டாயத்தின் பேரில் நாளைய(28) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் லசித் மலிங்கா, விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், இலங்கை அணி இருபதுக்கு -20 உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால் தகுதிச் சுற்றில் விளையாடி அதன் மூலம் தகுதி பெற வேண்டிய நிலையில் உள்ளமையினை காரணம் காட்டியதில் லசித் மாலிங்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது நிச்சயமற்ற நிலையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.