(FASTNEWS | COLOMBO) – ஆசியாவின் சிறந்த முதல்தர 50 ஹோட்டல்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமான ‘Ministry Of Crab’ உம் இணைந்துள்ளது.
பிரபல சமையல் கலைஞர் தர்ஷன முனிதாஸவின் கண்கானிப்பின் கீழ் நடத்தி செல்லப்படும் ‘Ministry Of Crab’ எனும் ஹோட்டல் 35வது இடத்தை பிடித்துள்ளது.
கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஹோட்டலின் கிளைகள் தற்போது சீனா, பிலிபைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.