குடு ரொஷானின் மனைவி “அருனி பபா” கைது…

(FASTNEWS|COLOMBO) பாதாள உலக குழு உறுப்பினர் குடு ரொஷானின் மனைவி ´அருனி பபா´ மற்றும் ´தெல் சூட்டி´ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப் பொருள் மற்றும் 1.7 மில்லியன் ருபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.