கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 24 மணித்தியால நீர் விநியோக தடை…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு மார்ச் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணி முதல் 31 திகதி காலை 09 மணி வரை 24 மணித்தியால நீர் விநியோக தடை படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மின்சார சபையின் மின் வெட்டு மற்றும் அவசர திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை பிரதேசங்களில், மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கொடிகாவத்த, முல்லேரிய, பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும், இரத்மலானை மற்றும் சொயிசாபுற தொடர்மாடி குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோக தடை படவுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.