ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…

(FASTNEWS|COLOMBO) தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட வேண்டும், அரசாங்க அலுவலகங்கள், மத ஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களில் மின் பாவனையை 10 சதவீதத்தினால் குறைத்தல், அநாவசியமான மின் விளக்குகளை அணைத்தல் மற்றும் வழமையாக வீதி மின் விளக்குகளை அணைக்கும் நேரத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக வீதிமின் விளக்குகளை அணைத்தல் போன்ற விடயங்களின் மூலம் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தல் ஆகியவை தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.