(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதாகி இந்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட கஞ்சிபானி இம்ரான் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த நொடியே மாலைதீவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அதற்கு முன்னர் கைது செய்ய இரகசிய பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கைதான கஞ்சிபான இம்ரான் தற்போது இரகசிய பொலிசாரின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கஞ்சிபானைக்கு ஆதரவளித்து இந்நாட்டு சட்டத்தரணிகள் சிலர் முட்டி மோதி களமிறங்கி உள்ளதாகவும் வெளிவட்டார தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.