(FASTNEWS | COLOMBO) – அமைச்சர் பாட்டளி சம்பிக்கவின் வாகனம் மோதியதில் ஊனமுற்றுள்ள சந்தீப் சம்பத் குணவர்த்தன எனும் இளைஞனது மேலதிக வைத்திய சிகிச்சைகளுக்கு உதவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார்.
அதன்படி, சந்தீப் சம்பத் இனது மேலதிக சிகிச்சைகளுக்கு 10 இலட்சம் ரூபா ஜனாதிபதியால் நேற்று(27) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அமைச்சர் பாட்டளி சம்பிக்க பயணித்த வாகனம் மோதியதில் சந்தீப் படு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சந்தீப் இனது நண்பர்கள் “சந்தீப் இற்கான யுக்தி’ எனும் பெயரில் அமைப்பொன்றினை அமைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், சிங்கப்பூரிற்கு அழைத்து சென்று எமது நண்பரை குணப்படுத்த ஜனாதிபதி உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
