(FASTNEWS|COLOMBO) அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி வரை குறித்த புதிய ETC அட்டைக்காக பதிவு செய்ய முடியும் எனவும், இந்த வசதி தற்பொழுது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மாத்திரம் காணப்படுகின்றன.
ஜாஎல, சீதுவ, கட்டுநாயக்க இடமாறும் மத்திய நிலையத்தில் அட்டையை பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 1969 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு அறிந்துக்கொள்ள முடியும். கொழும்பு சுற்றுவட்ட வீதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.