(FASTNEWS|COLOMBO) 2019 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 12084 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 5576 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரியில் 3670 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் மாதத்தில் இதுவரையில், 2838 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதில் அதிக நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தொற்று நோய் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.