ஆஷு மாரசிங்க பதவி விலகுவதாக பிரதமருக்கு தெரிவிப்பு..

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க, அரச கட்சியின் பிரதான உதவியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த கடிதத்தினை இன்று(29) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நேற்றைய தினம் (28) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள் இரண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில் குறித்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.