நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) வாகன விபத்துகளினால் ஒரு நாளைக்கு 8 பேர் வரை உயிரழப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்களில் உயிரிழப்போரின் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

இவர்களுள் பாதசாரிகளும் வாகன விபத்துகளில் பெருமளவில் உயிழகின்றனர் எனவும், புகையிரத குறுக்கு பாதைக்கு அருகாமையில் இடம்பெறும் விபத்துக்களில் வருடாந்தம் 400 க்கு மேற்பட்டோர் உயிரழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.