(FASTNEWS|NEPAL) நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதையடுத்து இராணுவத்தினர், பொலிசார் மற்றும் மீட்புப்பணியினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழையில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் புயல்மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.