பொரள்ளை பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் பிணையில் விடுதலை…

(FASTNEWS|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

05 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.