புருவங்களை அழகாக பராமரிக்க இப்படி ட்ரை பண்ணுங்க…

புருவங்களை அழகாக பராமரிக்க இப்படி ட்ரை பண்ணுங்க…

(FASTGOSSIP |COLOMBO) புருவங்களின் அழகை பாதுகாக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே வாக்சிங் முறையில் புருவங்களை நீக்ககூடாது சிலர் பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் உண்டு.இந்த முறை மிகவும் ஆபத்தானது.

அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும். எனவே இவ்வாறு செய்யகூடாது. புருவங்கள் நரைத் திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம்.
மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோபென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.

புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.