(FASTGOSSIP | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது யாரென்பது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதில் அநேகமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ இனது பெயர் வெளியிடப்பட்டிருந்தாலும், அவர் களமிறக்கப்பட மாட்டார் என்ற யூகம் ஒன்று தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது எனலாம்.
எனினும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் முன்வைக்கப்படும் சாத்தியப்பாடுகள் குறைந்தளவே காணப்படுகின்ற நிலையில், குறித்த அரசியல் காய் நகர்வுகளை நகர்த்திச் செல்லும் பசில் ராஜபக்ஷ அரசியல் காய் நகர்த்தலுக்கே என்றும் பலமாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு இருக்க ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே இருந்து தான் தெரிவு செய்யப்படுவார் என்பதில் ஐயமில்லையே…