(FASTNEWS|COLOMBO) சட்டவிரோதமாக கடல் வழியாக வௌிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் கலப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளபப்ட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.