(FASTGOSSIP | COLOMBO) – சிறந்த ஊடகக் கலாசாரமொன்றினை நாட்டினுள் உருவாக்கும் நோக்கில் ஊடகவியலாளர்கள் ஆற்றுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் தரமான பங்களிப்பினை கௌரவிப்பதற்காக 2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருது விழாவினை வருடாந்தம் நடாத்துவதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 10ம் திகதி குறித்த ஜனாதிபதி ஊடக விருது இடம்பெறவுள்ளது.
எனினும், சமூக வலைதளங்களில் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகின்றது. அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது எதிர்கால அரசியல் நோக்கங்களுக்காக இதனை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.