03 மாவட்டங்களில் கைத்தொழில் அபிவிருத்தி…

03 மாவட்டங்களில் கைத்தொழில் அபிவிருத்தி…

(FASTNEWS|COLOMBO) ருஹூனு அபிவிருத்தியின் கீழ், ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களில் கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பயனாளர்கள் கிராம மட்டத்திலான குழுக்கள் மூலமே தெரிவு செய்யப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் தலையீடுகள் அற்ற முறையில் அந்தத் தெரிவுகள் இடம்பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பெரலிய கிராம எழுச்சி வேலைத்திட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களை கிராம மக்களே தெரிவு செய்வதாக அவர் குறிப்பிட்டார். சுயதொழிலை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் திலீப் வெதஆராச்சி சுட்டிக்காட்டினார்.