மஹிந்தவின் சவாலுக்கு சிட்னி மறுப்பு…

(FASTGOSSIP | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து கருத்துக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரத்தினவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர முன்வைத்த சவாலினை சிட்னி ஜயரத்ன மறுத்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சிட்னி ஜயரத்ன பொலன்னறுவை மணல் பிரச்சினை தொடர்பில் முன்வைத்த ஆதாரங்கள் பொய்யானது என மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

அதனை மறுத்த சிட்னி ஜயரத்னவுக்கு, ஆதாரங்கள் பொய்யாயின் பதவி விலக வேண்டும் எனவும் மஹிந்த அமரவீர கூற, அதனை சிட்னி ஜயரத்ன நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.