2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(05)..

(FASTNEWS|COLOMBO) 2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(05) நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த வரவு செலவு திட்டத்தை  முன்வைத்தார். இதன்படி கடந்த 12ம் திகதி பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

அதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 பேர் வாக்களித்துடன், எதிராக 76 பேர் வாக்களித்திருந்தனர்.

ஜேவிபி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.

இந்தநிலையில் இன்று(05) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.