(FASTGOSSIP| COLOMBO)- முகநூல் ஊடாக கட்டியெழுப்பப்படும் காதல் தொடர்புகள் அநேகமானவை மரணத்திலேயே முடிவடைகின்றது. அதுபோல் ஒரு சம்பவமே நேற்று(04) அலரிமாளிகையிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தனது T-56 எனும் உத்தியோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே இவ்வாறு சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள குறித்த 31 வயதுடைய (85462*) தில்ருக் சமரசிங்க எனும் STF வீரர் வரகாபொல அல்கம பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்டவராவர்.
முகநூல் (facebook) ஊடாக திருமணமான பெண்ணொருவருடன் குறித்த வீரர் தொடர்பு வைத்து பழகி வந்த சந்தர்ப்பத்தில் குறித்த விவகாரத்திற்கு குறித்த பெண் விருப்பமில்லாமையினால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த முகநூல் ஊடாக பழக்கப்பட்ட பெண் இரு பிள்ளைகளின் தாய் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.