நியூசிலாந்து தாக்குததாரியை உளவள சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு…

நியூசிலாந்து தாக்குததாரியை உளவள சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு…

(FASTNEWS | COLOMBO) – நியூசிலாந்து – க்றிஸ்ட்சர்ச் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தி 50 பேரை கொலை செய்த தீவிரவாதி ப்ரென்டன் டரன்ட் இனை உளவள சோதனைக்கு உட்படுத்த அந்த நாட்டின் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவரது மனநிலை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு பரிசோதனைகளை நடத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

28 வயதான குறித்த நபர் கடந்த மார்ச் 15ம் திகதி நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 36 பேர் காயமடைந்தனர்.

இதற்காக அவர் மீது 50 கொலைக்குற்றச் சாட்டுகளுடன், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.