வெலே சுதா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு…

(FASTNEWS|COLOMBO) போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(05) நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அசல வெங்கப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து 7.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.