(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு கொண்டாட காலப்பகுதிகளில் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிப்பதால், அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேடப் படையணியினர் ஈடுபடுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக மேலதிக கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகும் வாகனங்களை அப்புறப்படுத்த 30 கிலோ மீற்றர்கள் இடைவெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.