பேரூந்து – ரயில் இன்று(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..

(FASTNEWS|COLOMBO)  – சில புகையிரத தொழிற்சங்கள் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து சேவை சங்கம் என்பன இன்று(09) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவுள்ளதாக தீர்மானித்த பணிப்புறக்கணிப்பில் எந்த விதமாற்றமும் இல்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று(09) நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு புகையிரத இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளன.

சம்பள பிரச்சினைகளை முன்னிறுத்தி குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது

இதேவேளை, அரசாங்கத்தினால் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள புதிய அபராத தொகை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கமும் இன்று(09) நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.