பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மதூஷை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை..

(FASTGOSSIP | COLOMBO)- பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் துபாய் பொலிசாரின் அதி உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கைக்கு நாடுகடத்த உள்ளதாக துபாய் அரசு, வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரபனவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்த முன்னர் இலங்கை அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வர உள்ளதாகவும், துபாய் வெளிநாட்டு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், மதூஷ் தன்னை இலங்கைக்கு நாடுகடத்த வேண்டாம் எனக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணை இம்மாதம் 14ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.