(FASTGOSSIP | COLOMBO)- “சிங்கள தாளத்திற்கு சிங்கள கடையில் பொருட்கள் வாங்குவோம்” (“සිංහල කමට සිංහල කඩෙන් බඩු ගනිමු,” ) என தொனியில் போஸ்டர்கள் இந்நாட்களில் சமூக வலைதளங்களிலும் போது இடங்கள் சிலவற்றிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
எனினும், குறித்த போஸ்டர்கள் எங்கு எப்போது யாரால் என்று நிச்சயித்து கூற முடியாதுள்ளது என்றே கூற வேண்டும்.
எவ்வாறாயினும் குறித்த போஸ்டர்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் பல்வேறுபட்ட கருத்துகளும் பதிவுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன எனலாம்…
போஸ்டருக்கு ஆதரவாகவும், அதற்கு எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றநிலையில் அனுபவங்களும் பகிரப்பட்டு வருகின்றது என்றே கூற வேண்டும்..
இது தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும், இது காலத்திற்கு காலம் எட்டிப்பார்க்கும் விடயங்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஷிரீன் ஸ்ரீகாந்த் போகொட முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்;

