(FASTNEWS | COLOMBO) – இஸ்ரேல் வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகும் பாராளுன்ற தேர்தல் இன்று(09) நடைபெறுகிறது.
யூதர்களுக்கு சார்பான வலதுசாரி கட்சி சார்பாக தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு போட்டியிடுகின்றார். அவருக்கு போட்டியாகவும் சவாலாகவும் மையவாத நீள வெள்ளை கூட்டணியின் தலைவரான ஓய்வு பெற்ற ஜெனரல் பென்னி கான்ட்ஸ் போட்டியிடுகின்றார்.
கடந்த 13 வருட காலமாக பிரதமர் பதவியில் நீடித்த பெஞ்சமின் நெத்தன்யாகு, ஐந்தாவது தடவையாக பதவியை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடுகின்றார். இத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் இஸ்ரேல் வரலாற்றில் அதிகூடிய ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுவார்.
ஆனால், அவர்மீது காணப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் இந்த வெற்றிக்கு சவாலாக காணப்படுகின்றன. இந்நிலையில், தான் வெற்றி பெற்றால் நாட்டில் தூய்மையான அரசியலை கட்டியெழுப்பவுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாகவும் பென்னி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இரு தரப்பிற்கும் பெரும்பான்மை கிடைக்காதென்றும் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படும் சாத்தியமே காணப்படுவதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.