அழகான உதடுகளை எப்படி பராமரிக்கலாம்?…

அழகான உதடுகளை எப்படி பராமரிக்கலாம்?…

 எளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

உதடுகளை பொலிவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க இரசாயணம் நிறைந்த கிரீம்களை உதட்டிற்கு பயன்படுத்த வேண்டாம்.

வறண்ட உதட்டிற்கு:
உதடு வறண்டு போய் இருந்தால், ஒரு காட்டனில் கிளிசரின் தொட்டு தூங்க போகும் முன் உதட்டில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவி விடலாம். இதனால் உதட்டில் இருக்கும் கருமை நிறம் மாறிவிடும். உதடு ஈரப்பதத்துடன் இருக்கும்.

மென்மையான உதட்டிற்கு:
பெரும்பான்மையானவர்களுக்கு சுற்றுச்சூழல் காரணமாகவும் புகைப்பழக்கம் காரணமாகவும் உதட்டின் நிறம் மாறிவிடும். தினமும் உதட்டிற்கு கிளிசரின் தடவி வருவது நல்லது. இது உதட்டை மென்மையாக்கி பிங்க் நிறத்தை கொடுக்கும்.

ஈரப்பதத்தை தக்கவைக்க:
உதடு வறண்டு போயிருந்தால் அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்தலாம் அல்லது கிளிசரின் பயன்படுத்தலாம். இது உடலை ஹைட்ரேட் செய்யும்.

உதடுகளில் வெடிப்பை தடுக்க:
உதடுகள் வறண்டு போனால் வெடிப்பு ஏற்பட்டு, இரத்த கசிவு ஏற்படும். உதடுகளின் மீது எப்போதுமே தனி அக்கறை செலுத்த வேண்டும். கிளிசரினை உதடுகளில் தடவி வர உதடுகளில் பிளவு ஏற்படாது.

இறந்த செல்களை அகற்ற:
உதடுகளுக்கு தொடர்ச்சியாக கிளிசரின் பயன்படுத்தி வர உதடுகள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு பொலிவாக இருக்கும்.