(FASTNEWS|COLOMBO) 21 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(09) காலை திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் தோட்டபகுதியில் 05 ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயங்களுக்கு உள்ளானவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதோடு ஒரு ஆண்தொழிலாளர் மாத்திரம் கொட்டகலை வைத்தியசாலையின் தீவிர சிக்சசை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.