
இலங்கையுடன் யதார்த்தமான ஒத்துழைப்பை பேணுவதே சீனாவின் எதிர்பார்ப்பு…
(FASTNEWS | COLOMBO)- இலங்கையுடன் யதார்த்தமான ஒத்துழைப்பை பேண எதிர்ப்பார்ப்பதாக சீனா அறிவித்துள்ளது.
மாத்தறை- பெலியத்தை ஆகிய இடங்களுக்கு இடையில் முதலாவது பயணிகள் ரயில் சேவை நேற்று(09) ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி நிதியளித்திருந்தது. சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லூ கங் இந்தக் கருத்தை நேற்று(09) சீனாவில் வைத்து வெளியிட்டுள்ளார்.