(FASTNEWS | COLOMBO) – இஸ்ரேலிய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட பிரதான இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு 33 – 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை, ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் பெனி கன்ட்ஸ் (Benny Gantz) 36 -37 வரையான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, இருவரும் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இதுவரை எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சியமைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.