சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரது பதவிக்காலம் நீடிப்பு..

(FASTNEWS | COLOMBO) – மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ செனவிரத்ன ஆகியோருக்கு ஒரு வருட சேவைக் கால நீடிப்பு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டீ.ஐ.ஜி. செனவிரத்ன, டீ.ஐ.ஜி. விக்ரமசிங்க ஆகியோருக்கு முறையே எதிர்வரும் 21,22 ஆம் திகதிகளில் குறித்த பதவிகளுக்கான காலம் நிறைவடையவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.