பாராளுமன்ற தேர்தல் – முதல் கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் ஆரம்பமாகியுள்ளது

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று(11) முதல் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.