(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(12) காலை இலங்கையை வந்தடைந்தார்.
இன்று(12) காலை 08.35 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அநேகமானோர் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
