(FASTNEWS | COLOMBO) – அமெரிக்காவில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, தற்போதைய அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துக்கு சார்பான சில ஊடகங்களினால் சோடிக்கப்பட்ட பொய்யே என, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து இன்று (12) காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்த போது, நீதிமன்ற தரப்பிலிருந்து, எத்தகைய சட்டப்பூர்வ ஆவணங்களும் தமக்கு கையளிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், ஐக்கிய அமெரிக்கா தமக்கெதிராக இவ்வாறு செயற்படபோவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்
————————————————————————————————————————-
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை வந்தடைந்தார்…
(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(12) காலை இலங்கையை வந்தடைந்தார்.