(FASTNEWS|COLOMBO) நேற்று(12) காலை 06.00 மணி முதல் இன்று(13) காலை 06.00 மணி வரை 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை போக்குவரத்து குற்றங்களுக்காக 9604 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.