(FASTNEWS|COLOMBO) நேபாளத்தில் விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று விமானம் ஒன்று புறப்பட்டு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.